சங்குச் சின்னத்தில் சந்திரகுமாரின் கட்சியும் போட்டி!

சங்குச் சின்னத்தில் சந்திரகுமாரின் கட்சியும் போட்டி!

editor 2

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதற்கு ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் அணியையும் இணைத்துக்கொள்வதற்கு குறித்த கூட்டணியினர் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

இது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்ற நிலையில் ஒன்பது அமைப்புக்கள் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.

ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட், தமிழ் மக்கள் கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசுக்கட்சி, ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் சமத்துவக் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய சந்திப்பில் பங்குகொண்டிருந்ததாகவும் கூட்டத்தின் முடிவிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Share This Article