மன்னார் ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவு!

மன்னார் ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவு!

editor 2

மன்னார் மறை மாவட்டத்தின் நான்வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று ஆயராக அருட்பொழிவு
செய்யப்பட்டார்.

மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளாரின் அருட்பொழிவும் திருப்பலியும் நேற்று காலை 9.30 மணியளவில்,
மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், மன்னார் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.

இதில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறைன் உடக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய மறை மாவட்ட ஆயர்கள் பங்கேற்றனர்.

அத்துடன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடக்கு மாகாண அதிகாரிகள், நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.

மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை கடந்த டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி மன்னார் மறை மாவட்டத்தின் 4ஆவது ஆயராக நியமிக்கப்பட்டார்.

பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்ட ஆயராக இருந்த இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று, மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அருட்பொழிவு செய்யப்பட்டார்.

Share This Article