கொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு சஜித் கோரிக்கை!

கொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு சஜித் கோரிக்கை!

editor 2

கொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்வரும் திங்கட்கிழமை (24) முறையான வேலைத்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற்றுவரும் கொலை கலாசாரத்துக்கு முடிவில்லாமல் இருக்கிறது. அண்மையில் மனித கொலை ஒன்று இடம்பெற்றது. இவ்வாறான நிலைமையில் தேசிய பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு, நீதிபதிகளின் பாதுகாப்பு சிவில் அமைப்பினரின் பாதுகாப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் பிரதிநிதிகளி பாதுகாப்பு தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் முறையான வேலைத்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

நாளுக்கு நாள் இந்த கொலை சம்பவங்கள் தொடர்ந்து செல்கின்றன. மனிதகொலை கலாசாரம் அதிகரிக்கப்படுகின்றன. அதனால் இதனை தாமதிக்க முடியாது. இதனால் பிள்ளைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகமும் கடும் அச்சத்துக்கு ஆளாகின்றன.

அதனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்வரும் திங்கட்கிழமையாவது முறையான வேலைத்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதுதொடர்பில் அரசாங்கம் வழங்கும் பதிலை எதிர்பார்த்து இந்த சபை கலரியில் சட்டத்தரணிகளும் வந்திருக்கிறார்கள். எனவே அரசாங்கம் தொடர்ந்தும் தாமதிக்காமல் மக்களின் பாதுகாப்புக்காக எடுத்திருக்கும் நடவடிக்கையை பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

Share This Article