முல்லைத்தீவில் வயோதிபத் தாய் ஒருவரைக் காணவில்லை!

Editor 1

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப தாயொருவர் ஏழு நாட்களாகக் காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84 வயதுடைய சலோசியாம்பிள்ளை மேரி புலோமினா என்ற வயோதிப தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 10.04.2025 முற்பகல் 09.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியவரை தேடும் பணி ஏழு நாட்களாக தொடர்கின்றது.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது 0775570692, 0770253210 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு குடும்பஸ்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article