இலங்கையில் 58 குற்றக் குழுக்கள்; 1400 அங்கத்துவர்கள்!

இலங்கையில் 58 குற்றக் குழுக்கள்; 1400 அங்கத்துவர்கள்!

editor 2

நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர். 

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் பல்வேறு சம்பவங்களுக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் இருப்பதாகவும், அக்குழுவிற்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

மேலும், அங்கு உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் சுமார் 1400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Share This Article