சவுதியிலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் விமானத்தில் மரணம்!

சவுதியிலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் விமானத்தில் மரணம்!

editor 2

சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்திலிருந்த இலங்கை பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (21) காலை இடம்பெற்றுள்ளது.

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 49 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article