யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விலையை 10 ரூபாய் குறைக்காமல் – 140 ரூபாய்கு விற்பனை செய்யும் வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்யலாம் என்று
யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாணின் விலையை 10 ரூபாய் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எனினும், பல வெதுப்பகங்கள் பாணின் விலையை குறைக்கவில்லை என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஆகவே, பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும் – என்றார்.