ஒத்திவைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியவர்கள் தங்களது பற்றுச்சீட்டுகளை சமர்ப்பித்தால் கட்டிய பணத்தை மீளப் பெறமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்டுப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பணத்தை செலுத்தியபோது வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளின் பிரதியைச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்துடன், விண்ணப்பக் கடிதம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இதனடிப்படையில், எதிர்வரும் 28ஆம் திகதிக்குள்மாவட்ட தேர்தல் பணிமனைகளில் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தால், வேட்பாளர்கள் தங்களின் கட்டுப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.