இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் கலாசூரி கலாநிதி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் தனது 79 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானார்.
1946 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும் ஒலிபரப்பு துறைக்கு பாரிய பங்காற்றியுள்ளார்.
அத்துடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையின் தமிழ் பிரிவின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாகக் கர்நாடக சங்கீதம், நாட்டியம் உள்ளிட்ட கலைகளை அவர் கற்பித்து வந்தார்.
அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் மாத்திரமே கலாசூரி, விஸ்வ பிரசாதினி, தேஷ நேத்ரு மற்றும் கலை செம்மல் போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ற இலங்கையின் ஒரேயோரு தமிழ் கலைஞராக கருதப்படுகிறார்.