யாழில் ஒருவரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!

யாழில் ஒருவரைக் கடத்தி பணம் கொள்ளையடித்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!

editor 2

நபரொருவர் கடத்தப்பட்டு 8.4 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதுடையவரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 8 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆரியக்குளம் பகுதியில் நபரொருவரை கடத்தி பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் ஏலவே பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article