வரவு – செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

வரவு - செலவுத்திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

editor 2

நாளை நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவுதிட்டத்தில் அரசாங்க ஊழியர்களிற்கான சம்பள அதிகரிப்பு,அரசாங்க வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் எனினும் வரவு செலவுதிட்டம் எனினும் வரவு செலவுதிட்டம் சர்வதேசநாணயநிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்படும் என நிதியமைச்சின் சிரேஸ்டஅதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப வரவு செலவு திட்டம் குறித்த விபரங்களை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் வரவு செலவுதிட்டம் தனது திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுறுவை மீறாததாக காணப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கான மூன்றாவது தொகுதி உதவியை வழங்குவது குறித்து ஆராய முடியும் என தெரிவித்திருந்தது.

அரசசேவைக்கு ஆட்களை சேர்க்கும்நடவடிக்கைகள் வரவுசெலவு திட்ட விவாதங்கள் முடிவடைந்த பின்னர் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள நிதியமைச்சின் அதிகாரி,எனினும் பெருமளவில் அரசசேவைக்கு ஊழியர்களை சேர்க்கப்போவதில்லை அவசியமாக உள்ள வெற்றிடங்கள் மாத்திரம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய வரிகள் விதிக்கப்படாது ,நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுகொண்டிருப்பதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகள் நீடிக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share This Article