இந்திய மீனவர்கள் 13 பேர் விடுதலை!

இந்திய மீனவர்கள் 13 பேர் விடுதலை!

editor 2

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 17 இந்திய மீனவர்களில் மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

ஏனைய நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த இந்திய மீனவர்கள் 17 பேரும் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

இந்த மீனவர்களின் வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இதன்போது, இந்த இந்திய மீனவர்கள் 17 பேரில் இரண்டு மீனவர்களிடம் கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத நிலையில் அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏனைய இரண்டு மீனவர்களுக்கும் இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share This Article