நெல்லுக்கான கொள்வனவு உத்தரவாத விலை; அரசாங்கம் அறிவிப்பு!

நெல்லுக்கான கொள்வனவு உத்தரவாத விலை; அரசாங்கம் அறிவிப்பு!

editor 2

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று புதன்கிழமை (05) அறிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அரிசி சந்தையின் போக்கு மற்றும் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை மதிப்பீடு செய்த பின்னரே விலைகள் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாட்டு நெல் ஒரு கிலோவுக்கு 120 ரூபாய்க்கும். சம்பா நெல் ஒரு கிலோவுக்கு 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோவுக்கு 132 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படும்.

மேலும், விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி சந்தையில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதுடன், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த விலையில் நெல் கொள்வனவுகளை உடனடியாக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article