கடந்த கால மோசடி வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன?

கடந்த கால மோசடி வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன?

editor 2

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்ற மோசடி, சட்டவிரோத சொத்துக்குவிப்பு விடயங்களுடன் தொடர்புடைய சில வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, முன்பு நடைபெற்ற ஊழல், மோசடி மற்றும் சட்ட விரோத சொத்துக் குவிப்பு விடயங்கள் தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டு, பின்னர் விசாரணைகள்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகளையே மீண்டும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நான்கு வழக்குகளின் விசாரணைகளை நிறைவு செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நான்கு வழக்குகள் தொடர்பான கோப்புகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று வழக்குகள் தொடர்பிலும் துரிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்குகள் தொடர்பில் முன்னைய அரசின் ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள நில வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான புதியதிட்டத்தை தொடங்க நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு முடிவு செய்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்களில் 33,000 இற்கும் அதிகமான காணி வழக்குகள் இருப்பதாக, அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.

பல தரப்பினரின் பங்கேற்புடன் இது தொடர்பில் ஆராய குழுவொன்று நிய
மிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share This Article