மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் இறுதிக் கிரியை இன்று நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமயகிரியைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம் பெற்று, பின்னர் பிற்பகல் 03 மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சகலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு இலங்கை தமிழ
ரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.