ரணில் – சஜித் விரைவில் சந்திக்கின்றனர்!

ரணில் - சஜித் விரைவில் சந்திக்கின்றனர்!

editor 2

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

கம்பஹாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

விரைவில் அதற்கான இணக்கம் ஏற்படும் அதேநேரம், சின்னம் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. 

எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் ஏற்கனவே பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இதற்கமைய நேற்று இரவு கட்சியின் பொதுச் செயலாளர்கள் பங்கேற்ற மற்றொரு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. 

இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article