இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின் மாதாந்த விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 309 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையை 286 ரூபாயாக, தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.