அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் மாவை!

அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் மாவை!

editor 2

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை மயங்கிவீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிவிகே சிவஞானம், சத்தியலிங்கம் ஆகிய இருவரும் தமது வீட்டிற்கு வந்து மாவை சேனாதிராஜாவுடன் உரையாடிவிட்டுச் சென்றபின்னர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாகவும், அதன் தொடராகவே அவர் இவ்வாறான ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் தலைமையை கைப்பற்றும் முனைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினரும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான அணியினருக்கும் இடையில் கடும் முறுகல் நிலை நிலவுவதுடன் நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article