நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்பது இனவாதம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்பது இனவாதம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

editor 2

நாட்டில் அரசியல் கைதிகள் இல்லையென அரசாங்கம் கூறுகின்றமை இனவாத கருத்தாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்ட அவர் அவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தேசிய மக்கள் சக்தியினுடைய ஒரு பிரதான அங்கமாக ஜே.வி.பி இருக்கின்றது. 

ஜே.வி.பி அமைப்பும் ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாகும். 

ஜே.வி.பியினுடைய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட காலபகுதியில் அவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாகத் தான் ஜே.வி.பியும் அறிமுகப்படுத்தியது. 

வட கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாகக் கணிக்க முடியாது என தேர்தல் காலத்தின் பின்னர் அரசாங்கம் கூறுகின்றமை இனவாத கருத்தாகும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Share This Article