மன்னார் நீதிமன்ற வளாக நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கு விசாரணை ஒன்றுக்காக பிரசன்னமான இருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு வந்தவர்களே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏ – கே ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.