குஞ்சுக்குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கினார்!

Editor 1

மன்னார் மாவட்டம் – மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும் நேற்று (14) மாலை வரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞன் காணாமல் போனமை குறித்து மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் குறித்த இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் தேடுதல்களை மேற்கொண்டனர்.

எனினும் இதுவரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.

Share This Article