நாடாளுமன்ற பணிக்குழாம் அதிகாரிகள் சிலர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இணைக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளும் நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்து, அங்குள்ள சில அதிகாரிகளிடமும் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.