வாய் சுத்தப்படுத்தும் ஒரு வகையான மருந்தை விநியோகிப்பதற்கான கேள்விப்பத்திரம், கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பதிவுச் சான்றிதழுடன்
குறைந்த விலைப்பட்டியலைச் சமர்ப்பித்த நிறுவனத்துக்குக் குறித்த கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டதாக அந்த கூட்டுத்தாபனம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
குறித்த ஏலத்துக்காக, விலைப்பட்டியலைச் சமர்ப்பித்த அனைவரும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொள்முதல் குழு அந்த கேள்விப்பத்திரத்தை வழங்குவதற்குத்
தீர்மானித்திருந்த போதிலும் அதன் பின்னரான பின்தொடர்தல் செயல்முறையின் போது, குறித்த விநியோகஸ்தர் பணம் செலுத்துவதற்குத் தவறியிருந்தமை தொடர்பில் பணிப்பாளர்கள் குழாமினால் அடையாளம் காணப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த கேள்விப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில், விலைப்பட்டியலைச் சமர்ப்பித்துள்ள ஏனைய விநியோகஸ்த்தர்களில் தகுதியான ஒருவரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.