கிளிநொச்சி – கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை யாழ்ப்பாணம் – பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.