தரையிறங்காது திரும்பிய இலங்கை விமானங்கள் 04!

Editor 1

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த UL-174 விமானமும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், துருக்கியிலிருந்து பயணித்த TK-730 விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பின்னர், கடும் பனிமூட்டம் படிப்படியாக குறைந்ததை அடுத்து, ஏனைய விமான நிலையங்களில் தரையிறங்கிய நான்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Share This Article