வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வெளிவிவகார அமைச்சினால் டிஜிட்டல் வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 7 தூதரகங்கள் ஊடாக இந்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான், கட்டார், குவைட் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் மிலான், டொரோண்டோ, மெல்பர்ன் மற்றும் டுபாய் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கையின் துணை தூதரகங்கள் ஊடாக இலங்கை பிரஜைகள் குறித்த சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.