இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அலன்டீலன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் M.A.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் அங்கத்தவரான அலன்டீலனை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பு கடிதம் எம்.ஏ.சுமந்திரனின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் விசுவாசத்துக்குரிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக கிளிநொச்சியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.