வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரிய முன்னைய அரசாங்கங்கள்!

Editor 1

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நாட்டிற்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இலங்கைக்கு வந்த தென்கொரிய மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரப்பட்டதால் தாம் தமது முதலீடுகளை கைவிட்டதாக தென் கொரிய மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்தே, அந்த முதலீடுகளை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு தாம் கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீவன் ஆகியோரே இந்த முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

தென்கொரிய தூதுவர் மேலும் கூறுகையில்-

முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு குழாய் மூலம் எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்ட திறந்த கேள்வி கோரலை எனது நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர் பெற்றனர்.

ஆனால் கப்பம் கொடுக்காத காரணத்தால், திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

Share This Article