வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத
பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வடக்கு மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி (அலைந்துதிரியும்) மாடுகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் 7 ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்துக்கு வட மாகாணம் முழுவதும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக எச்சரிக்கை வழங்கப்படவுள்ளது.
அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டும் கருத்தில் கொள்ளாத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.