சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை!

சாரதி அனுமதி அட்டைகள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை!

editor 2

இதுவரையில் கால தாமதம் ஆகியுள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். 

வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், இணையவழி முறையினூடாக குறித்த நிறுவனத்தின் சேவைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

Share This Article