சீனாவில் பரவும் வைரஸ் பரவல் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக இலங்கை சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் அறிவுறுத்தல் விடுக்கப்படும் என கருத்துரைத்த தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொவிட் – 19 பரவல் ஏற்பட்டு 05 வருடங்களின் பின்னர் தற்போது சீனாவில் மற்றுமொரு வைரஸ் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்.எம்.வி.பி என அறியப்படுகின்ற குறித்த வைரஸ் பரவலை அடுத்து சீனாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.