தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கலந்துரையாடி அச்சந்திப்புக்குரிய திகதியைத் தீர்மானிக்கவிருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர் வருங்காலத்தில் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தியிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், அன்றைய தினம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் மீண்டும் கலந்துரையாடவிருப்பதாகத் தெரிவித்தார்.
அதனூடாக தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அத்தீர்வுத்திட்ட வரைவு குறித்து ஆழமாக ஆராயவும், கலந்துரையாடவும்
முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.