கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களை டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த தினத்தில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் ஏற்கனவே போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.