நேபாளத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம்…! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்..!

cyberiolk

நேபாளத்தில் ஒரே இரவில் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஏப்ரல் 27 மற்றும் ஏப்ரல் 28க்கு இடைப்பட்ட இரவில் நேபாளத்தில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 4.8 மற்றும் 5.9 மெக்னிடியூட் அளவில் ஒரே இரவில் நேபாளத்தை தாக்கியதாக அந்நாட்டு நில அதிர்வு தேசிய மையம் கூறியுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 800 கிமீ தொலைவில் உள்ள பஜூராவின் டஹாகோட் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்

Share This Article