வவுனியாவில் விபத்து; இளைஞர் மரணம்!

Editor 1

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் மோட்டார்
சைக்கிளில் சென்றார்.

கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து
வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞன் படுகாயமடைந்த
நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். மற்றைய
வர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம்இ அராலி பகுதி யைச் சேர்ந்த ப. சஞ்சயன்
என்ற 22 வயது இளைஞனே உயிரிழந்தார்.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

Share This Article