மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 பேருக்கு பொதுமன்னிப்பு!

Editor 1

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் 12 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்ற இந்த 12 பேருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகள் பொது மன்னிப்பு பெற்று வெளியேறியுள்ளனர்.

பொது மன்னிப்பில் அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படும் நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறைச்சாலையின் தலைமை அதிகாரி, சிறைச்சாலை நலன்புரிச்சங்க அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Share This Article