‘‘மூன்று கட்டங்களின் அடிப்படையில் வாகன இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இந்நிலையில், வாகன இறக்குமதிக்கான முதலாம் கட்டத்தின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் இறக்குமதி செய்யப்பட்ட ரசீது அல்லது சுங்கப் பதிவு தினத்திலிருந்து 90 நாட்களில் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்’’ என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வரையறை விதித்துள்ளது.
இதுதொடர்பில் அந்த அமைச்சு வெளியிட் டுள்ள அறிக்கையில் மேலும்
இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவேண்டும். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்ய முடியாவிட்டால், அவ்வாறான வாகனங்கள் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர் மோட்டார் வாகனச் செலவு, காப்பீடு மற்றும் இறக்குமதி கட்டணங்கள் மற்றும் தாமதக் கட்டணங்களில் 45 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
குறித்த இறக்குமதியாளரால் விற்பனை நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இறக்குமதியாளரின் பெயரிலோ, வியாபாரத்தின் பெயரிலோ அல்லது பணிப்பாளர்களின் பெயரிலோ பதிவு செய்யமுடியாது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வாங்குபவரின் பெயரிலேயே பதிவு செய்யப்படவேண்டும்.
இறக்குமதியாளரொருவர் ஆறு மாதகாலத்துக்குள் இறக்குமதி செய்த மொத்த கார்களில் 25 சதவீதத்தை, வழங்கப்பட்டுள்ள 90 நாட்கள் கால அவகாசத்துக்குள் பதிவு செய்யாவிட்டால், குறித்த இறக்குமதியாளருக்கு 36 மாதங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும். வாகனங்களின் பயன்பாட்டு காலம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது வாகன உற்பத்தி மற்றும் கப்பல் அனுமதிப்பத்திரம் அல்லது விமான அனுமதிப்பத்திரம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும்.
வாகனத்தின் இயந்திரம் பாவிக்கப்படாமல் இருந்தாலும் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்படும்போது பாவிக்கப்படாத புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதையும் வாகனங்களை பதுக்கி வைப்பதையும் தடுப்பதே இதன் நோக்கமாகும். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.