முழக்கம் மஜீத் எனப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் காலமானார்.
நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் சாய்ந்தமருதில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (19) மாலை அவர் காலமானார்.
அவரது இறுதிக்கிரியை இன்று காலை 9 மணியளவில் இடம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமரர் ஏ.எல்.அப்துல் மஜீத் முன்னதாக இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமாக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.