2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது.
இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லெசந்து ரன்சர குமாரகே, 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.