சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
10ஆவது நாடாளுமன்றத்தின் 12ஆவது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல, தமது கல்வித் தகைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கருத்திற் கொண்டு நேற்றைய தினம் பதவி விலகியிருந்தார்.
இந்தநிலையில், தமது கல்வித் தகைமை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ள போதிலும், சபாநாயகர் என்ற வகையில் தமது கல்வித் தகைமை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிடவில்லை என அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அசோக ரன்வல, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.