சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) இன்று கையெழுத்திட்டது.
கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் அவரது தலைமையின் கீழ் உள்ள பிற முக்கிய அரசு நிறுவனங்களின் மீதான பொது நம்பிக்கையை அவர் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய பெரேரா, சத்துர கலப்பத்தி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.