மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த நபருக்கும் அவரது மனைவின் சகோதரனுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து இருவரும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மைத்துனர் அவரை கோடரியால் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.