இந்திய – இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான SLINEX – 2024 இல் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.
இந்திய – இலங்கை கூட்டுக் கடற்படை பயிற்சியான SLINEX – 2024 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் வெள்ளிக்கிழமை (20) வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நடத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.