தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி யாழ்.சிறைச்சாலையில் மரணம்!

Editor 1

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதி ஒருவர், யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டவேளை, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். நீதிமன்றத்துக்கு நேற்று காலை வழக்கு ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த, 40 வயதான இரத்தினசிங்கம்
சந்திரகுமார் என்பவர், இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கைதி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This Article