கடும் மழையால் முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் வெளிவந்தன!

Editor 1

அண்மையில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடி பொருட்கள் சில முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெளியில் தென்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் வெளிப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் குறித்த பகுதியை அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் நிலத்தை அரித்து பாய்ந்துள்ளது.

இதனால் இந்த வெடிபொருட்கள் வெளிப்பட்டுள்ளன.

Share This Article