மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை – மியான்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகன விபத்தில் காயமடைந்த 3 பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து நாவலடி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், நாவலடி பகுதியிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி, அதில் பயணித்த பெண் மற்றும் 13 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.