நாடாளுமன்றில் நேற்று (04) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (05) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
எனினும் அதற்குப் பின்னால் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.