மதுபானசாலை அனுமதிப்பட்டியல் விபரம் இன்று வெளியாகும்!

Editor 1

புதிதாக மதுபானசாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். 

அதனடிப்படையில் குறித்த பட்டியல் வெளிப்படுத்தப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தினார். 

இதற்குப் பதிலளித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அவ்வாறு மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் இன்றைய தினத்துக்குள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். 

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article