நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் – ஆளுநர்!

Editor 1

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் எனவும், கடந்த காலங்களில் அவ்வாறு நடக்க
வில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிதிக் கொள்கையின் படி இது நடக்காது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.புதிய பணம் அச்சிடுதல் மற்றும் பணவீக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வட்டி விகிதங்களை நிலையானதாக வைத்திருக்க தேவையான பணத்தை மத்திய வங்கி வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், மத்திய வங்கிக்கு நேரடியாகப் பணத்தை
அச்சிடும் திறன் இல்லை எனத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், நாளாந்தம் நிலையான பணப் புழக்கத்தை பேணுவதற்கு தேவையான பணத்தை மத்திய வங்கி வெளியிடும் என்றும் தெரிவித்தார்.

Share This Article