நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

Editor 1

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் அசோக ரன் வல தலைமையில் கூடவுள்ளது.

10ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது.

அன்றைய தினம் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதி தவிசாளர் தெரிவு, பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியேற்பு என்பன இடம்பெற்றன.

அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை இடம்பெற்றது. எனவே, இன்று முதலே பாராளுமன்றத்தில் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைமீது முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளது.

மறுநாள் 04 ஆம் திகதியும் குறித்த விவகாரம் தொடர்பிலேயே முற்பகல் 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை விவாதம் இடம்பெறவுள்ளது.

டிசெம்பர் 5 ஆம் திகதி இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

Share This Article